உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்னி துடுப்பாட்ட அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிட்னி துடுப்பாட்ட அரங்கம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உலகின் மிக பெரிய துடுப்பாட்ட விளையாட்டுத் திடல் ஆகும் ஆகும். இதில் பல பன்னாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த அரங்கில் ரக்பி, ஆஸ்திரேலிய கால்பந்துப் போட்டி மற்றும் பல போட்டிகளும் நடைபெறுகின்றன. இது நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு சொந்தமான விளையாட்டரங்கம் ஆகும். இது எஸ்சிஜி டிரஸ்ட்டினால் கவனிக்கப்படுகிறது.[1][2][3]

வரலாறு

[தொகு]

1811 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்சின் ஆளுநர் லாச்லன் மச்கோரி இரண்டாம் சிட்னி என்ற ஒரு இடத்தை உருவாக்கினர். அது ஒன்று அரை மைல் அகலமும் ஆக்ஸ்போட் தெருவை தெற்கிலும் ரண்ட்விக் ரேஸ் கோர்ஸை வடக்கிலும் கொண்டிருந்தது. இது 1850 ஆண்டுவாக்கில் குப்பை போடும் இடமாக இருந்தது. இதை விளையாட்டிற்குப் பயன்படுத்தவில்லை. பின்பு இரண்டாம் சிட்னியின் தெற்கு பகுதியான விக்டோரியா பரக்க்ஸ் ஆங்கிலேய ராணுவத்திற்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அதை ஆங்கிலேயர்கள் புல்வெளி தோட்டம் போல் பயன்படுத்தினர். மற்றும் அதை ராணுவ வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானமாக வைத்தனர். இரு ஆண்டுகளுக்குப் பின்பு, விக்டோரியா பரக்க்ஸ் ஒரு அணியை உருவாக்கினார். அதற்கு கேரிசன் அணி என்று பெயர் வைத்தார். அதன் பின் விளையாட்டுத் திடலை கேரிசன் விளையாட்டுத் திடல் என்று அழைத்தனர். இந்த விளையாட்டுத் திடலை பெப்ருவரி 1854 இல் திறந்தனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sydney Cricket Ground
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Seating Capacities". sydneycricketground.com.au. Sydney Cricket & Sports Ground Trust. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  2. "Sydney Cricket Ground". Austadiums.com. Austadiums. Archived from the original on 19 January 2016. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
  3. Atkinson, Cody; Lawson, Sean (15 June 2022). "From the SCG to Kardinia Park — do ground sizes contribute to the end result in AFL games?". Australian Broadcasting Corporation. https://www.abc.net.au/news/2022-06-16/cody-and-sean-afl-analysis-how-much-do-ground-sizes-matter/101154950.